
கோலாலம்பூர், நவ 20 – தைவான்கீலுங் சிட்டியில் கரஓகே (Karaoke) நிலையத்திற்கு வெளியே நிகழ்ந்த கைகலப்பின்போது மூன்று ஆடவர்களால் தாக்கப்பட்ட மலேசிய மாணவர் ஒருவர் மரணம் அடைந்தார். National Taiwan Ocean பல்கலைக்கழகத்தின் 23 வயது மாணவரான அந்த மலேசியர் மூன்று சந்தேகப் பேர்வழிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்ததாக போலீஸ் விசாரணை மூலம் தெரியவந்துள்ளது. அந்த மாணவரும் அவரது 24 வயது ஆண் நண்பரும் அந்த கராக்கோ மையம் இருக்கும் கட்டிடத்தின் கீழ் தளத்தில் மூன்று நபர்களுடன் மோதலில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. மது அருந்தியிருந்த அந்த மூன்று நபர்கள் அந்த மாணவரை கத்தியால் குத்தியதைத் தொடர்ந்து மருத்துவமனையில் சேர்க்கட்ட அவர் நாட்களுக்கு பிறகு சனிக்கிழமை இறந்ததார். கைகலப்பில் சம்பந்தப்பட்ட மூன்று சந்தேகப் பேர்வழிகளும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டதாக தைவான் போலீசார் தெரிவித்தனர்.