Latestஉலகம்

தைவானில் ரோபோ வேக்யூம் மூலம் மனைவியின் கள்ளக்காதலைக் கண்டுபிடித்த கணவருக்கு சிறைத்தண்டனை

தைவான், செப்டம்பர் 4 – தைவானில் மனைவி வேறு ஒருவருடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகித்த கணவர், வீட்டில் இருந்த ரோபோ வேக்யூம் கிளீனரின் கேமரா காட்சிகளைப் பார்த்து, மனைவி மற்றொரு ஆணுடன் நெருக்கமாக இருப்பதைப் பதிவு செய்தார்.

மனைவி மற்றும் அந்த ஆண் மீது வழக்குத் தொடர்ந்த அவர், திருமண உரிமைகள் மீறப்பட்டதாகக் கூறி 2 மில்லியன் தைவான் டாலர் இழப்பீடு கோரினார். நீதிமன்றம் அவருக்கு சாதகமாகத் தீர்ப்பளித்து, மனைவி 500,000 தைவான் டாலர் அதாவது 63,778 ரிங்கிட்டை வழங்க உத்தரவிட்டது.

ஆனால், மனைவியின் அனுமதியின்றி அவரது தனிப்பட்ட காட்சிகளைப் பதிவு செய்ததற்காக கணவருக்கும் தண்டனை விதிக்கப்பட்டது. அவருக்கு 5 மாத சிறைத்தண்டனையும் 150,000 தைவான் டாலர் 19,133 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது.

திருமண உறவு இருந்தாலும், ஒருவரின் தனியுரிமையை மீற முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!