Latestமலேசியா

தைவான் நிலநடுக்கம் ; மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை, விஸ்மா புத்ரா நிலைமையை அணுக்கமாக கண்காணிக்கிறது

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 3 – தைவான், ஹுவாலியான் நகரை இன்று காலை உலுக்கிய நிலநடுக்கத்தில், மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்பதை, விஸ்மா புத்ரா வாயிலாக, உள்துறை அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

அங்குள்ள நடப்பு நிலவரங்களை, தைப்பேயிலுள்ள, மலேசிய நட்பு மற்றும் வர்த்தக மையம் மூலம், விஸ்மா புத்ரா அணுக்கமாக கண்காணித்து வருவதாக ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை மணி பத்து மணி நிலவரப்படி, அந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என விஸ்மா புத்ரா அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது

அந்த நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விஸ்மா புத்ரா ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டுள்ளது.

அதே சமயம், பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருக்கும் மலேசியர்கள், பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுக்குமாறும், உதவி தேவைப்பட்டால் தைவானுக்கான மலேசிய உயர் ஆணையத்தின் உதவியை நாடுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த 25 ஆண்டுகளில், தைவானை உலுக்கிய மிக மோசமான நிலநடுக்கமாக அது கருதப்படுகிறது.

அதனால் கட்டடங்கள் பல சேதமுற்ற வேளை ; பல இடங்களில் மின் விநியோக தடையும் ஏற்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!