Latestமலேசியா

தொடர்ந்து 13 நாட்களாக நெகிரியில் பல இடங்களில் மழை இல்லை

சிரம்பான், மார்ச் 20 – நெகிரி செம்பிலானில் தொடர்ந்து 13 நாட்களாக Tambin மற்றும் Jempolலில் பல இடங்களில் மழை பெய்யவில்லை. நடப்பு El Nino வறட்சி நிலையே இதற்கு காரணம் என நெகிரி செம்பிலான் மந்திரிபெசார் டத்தோஸ்ரீ Amiduddin Harun தெரிவித்திருக்கிறார். Jelai கால்நடை மையம் மற்றும் Felda Palong Lima வில் 13நாட்களாக மழையின்றி கடும் வறட்சியாக உள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் 10 நாட்களாக Kuala Pilah மற்றும் Jelebu விலும் மழையின்றி வறட்சி நீடித்ததாக அவர் கூறினார். மாநிலத்தில் வெப்ப நிலைமை மோசமாக உள்ளது.

சிரம்பானில் தொடர்ந்து மூன்று நாட்களாக வெப்ப அளவு தினசரி 35 முதல் 37 டிகிரி செல்சியசாக இருந்தது . Jelebu, Rembau மற்றும் Tambin ஆகிய மாவட்டங்களில் அனைத்து தரப்பினரும் திறந்த வெளியில் தீ வைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர். மேலும் நோன்பு மாத காலமாக இருப்பதால் சுகாதார நலனில் கூடுதல் கவனம் செலுத்தும் வகையில் வெளிநடவடிக்கைகளை தவிர்த்துக்கொள்ளும்படி பொதுமக்களுக்கு நினைவுறுத்தப்பட்டிருப்பதாகவும் Aminuddin Harun தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!