Latestஉலகம்மலேசியா

தொற்றா நோய்கள் பட்டியலில் இனி வாய்ப்புண் நோயும் சேர்க்கப்படுகிறது

புத்ராஜெயா, மே-31 – NCD எனப்படும் தொற்றா நோய்கள் பட்டியலில் புதிதாக வாய்ப்புண் நோய் சேர்க்கப்படவிருக்கிறது.

வாய்ப்புண் நோயைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு உலக நாடுகள் முன்னுரிமைக் கொடுப்பதை அது புலப்படுத்துவதாக, சுகாதார அமைச்சு கூறியது.

அடுத்தாண்டு நடைபெறவிருக்கும், NCD தொடர்பான ஐநாவின் நான்காவது உயர் மட்ட அளவிலான கூட்டத்தின் போது, தொற்றா நோய்களின் பட்டியலில் வாய்ப்புண் நோய் சேர்க்கப்படுவதாக KKM தெரிவித்தது.

2023-2030 வரைக்குமான உலக வாய் சுகாதார நடவடிக்கைத் திட்டத்தின் அடைவுநிலை தொடர்பில் சுவிட்சர்லாந்து, ஜெனிவாவில் நடைபெற்ற அனைதுலக சுகாதார மாநாட்டின் போது, அது குறித்து விவாதிக்கப்பட்டதாக KKM விளக்கியது.

ஐநா உறுப்பு நாடுகள், வாய் சுகாதாரம் மீதான தங்களின் கடப்பாட்டை உறுதிச் செய்து வருகின்றன.

அவ்வகையில் மற்ற NCD நோய்களுடன் இந்த வாய்ப்புண் நோயைத் தடுக்கும், கட்டுப்படுத்தும் முயற்சிகளை விரைந்து விரிவுப்படுத்த அவை உறுதிக் கொண்டுள்ளன.

வாய் சுகாதாரம் மீதான உலகலாயக் கொள்கையைப் பின்பற்றி, அந்தந்த நாடுகள் தத்தம் தேசியக் கொள்கையை வலுப்படுத்துவதும் அம்முயற்சியில் அடங்கும் என KKM கூறியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!