
கோலாலம்பூர், செப்டம்பர் 19 –முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக்கிற்கு நிபந்தனையுடன் மன்னிப்பு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, போக்குவரத்து அமைச்சர் பதவியிலிருந்து விலக முன்வந்துள்ளார் DAP பொதுச் செயலாளர் அந்தோணி லோக்.
இன்று புடுவில் உள்ள DAP தலைமையகத்தில் நடைபெற்ற கட்சியின் அவசர மத்திய செயற்குழுக் கூட்டத்திற்குப் பின்னர், செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
தனது பதவி விலகல் கடிதத்தைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் விரைவில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இருப்பினும், அரசியல் நிலைத்தன்மையை உறுதிசெய்யும் வகையில் DAP தொடர்ந்து ஒற்றுமை அரசாங்கத்தில் நீடிக்கும் என்றும், கட்சியைச் சேர்ந்த மற்ற அமைச்சர்கள் தங்களது பதவிகளில் தொடர்வார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், DAP பொதுச் செயலாளர் பதவியில் தாம் தொடர்ந்து நீடிக்கவுள்ளதாகவும் அந்தோணி லோக் உறுதிப்படுத்தினார். 



