Latestஇந்தியா

நடிகர் அஜித்தின் நலம் குறித்து பதிவு செய்த த.வெ.க தலைவர் விஜய்; வைரலாகும் சமூக வலைத்தளப் பதிவு

சென்னை, மார்ச் 10 – நடிகர் அஜித் சிகிச்சைக்குப் பின், மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியதையடுத்து, தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் தொலைபேசியில் அழைத்து நடிகர் அஜித்திடம் நலம் விசாரித்த தகவல் வெளியாகி உள்ளது.

அதனை தொடர்ந்து நடிகர் விஜய், அஜித்தின் உடல் நலம் சீராக இருப்பதாகவும், தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று சமூக வலைத்தளப் பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில் விஜய், அவரின் கட்சி வாகனத்தின் மேல் அமர்ந்திருப்பதும், அஜித் மோட்டாரில் இருப்பதுமாக அமைந்துள்ள அந்த புகைப்படத்துடன் விரைவில் அஜித் நலமடைய வேண்டும் என்ற பதிவு தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!