
வாஷிங்டன் ஆகஸ்ட்.13-கடந்த மாதம் துருக்கி பயணத்தின் போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரகசியமாக ஒரு சிறிய அரசு விமானத்திற்கு மாற்றப்பட்ட தகவல் வெளியாகியிருக்கிறது.
தோளில் வைத்து ஏவப்படும் ஏவுகணையால் அவரது விமானம் குறி வைக்கப்படலாம் என்ற அச்சுறுத்தல் காரணமாக அவ்வாறு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஈரானுடனான பதற்றம் அதிகரித்திருந்த நிலையில், NATO உச்சநிலை மாநாட்டில் பங்கேற்க Ankaraவிற்கு டிரம்ப் மேற்கொண்ட பயணத்தின் இறுதி நாளில் அம்மருட்டல் இருந்ததாகக் கூறப்படுகிறது.
அந்த அச்சுறுத்தல் நம்பகரமானது தகவலாக இருந்ததால் உடனடியாக அமெரிக்க அதிபரின் நடமாட்டங்களை மறைக்க மாற்று நடவடிக்கை கையாளப்பட்டது.
டிரம்ப் முதலில் Air Force One விமானத்தில் ஏறினார். பின்னர் உணவு ஏற்றி செல்லும் வாகன உதவியுடன் அவர் ராணுவ விமானத்துக்கு மாற்றப்பட்டார். விமானத்தில் இருந்த செய்தியாளர்களுக்கும், சில வெள்ளை மாளிகைப் பணியாளர்களுக்கும் அவர் ரகசியமாக மாற்றப்பட்டது தெரியாது.
டிரம்ப் Ankaraவில் இருந்து பிரிட்டனில் எரிபொருள் நிரப்பும் நிறுத்தத்திற்கு எந்தவித அசம்பாவிதமும் இன்றிக் கொண்டுச் செல்லப்பட்டார். ஏவுகணைத் தாக்குதல் தொடர்பான உளவுத் தகவல் எங்கிருந்து வந்தது என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
இவ்வேளையில், சூடான விமான இயந்திரங்களைத் தாக்கும் ஒரு புதிய வகை வெப்பம் தேடும் ஏவுகணை அச்சுறுத்தலாக அது இருக்கலாம். வழக்கமாக ரேடார் வழிகாட்டும் அச்சுறுத்தல்களை விட இவற்றைக் கண்டறிவது கடினம் என Mitchell விண்வெளி ஆய்வுக் கழகம் தெரிவித்துள்ளது.
டிரம்ப் உள்ளிட்ட அமெரிக்க அதிபர்கள், போர் மண்டலங்கள் அல்லது அதிக ஆபத்துள்ள பகுதிகளுக்குச் செல்லும் போது பாதுகாப்பு காரணங்களுக்காக இதற்கு முன் அவ்வப்போது ரகசியமாகப் பயணம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.



