Latestமலேசியா

நாட்டில் தினசரி 22 சிறார்கள் துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றனர்

கோலாலம்பூர், நவ 30 – இவ்வாண்டு ஆகஸ்டு மாதம் நாட்டில் தினசரி 22 சிறார் துன்புறுத்தல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ நான்சி சுக்ரி தெரிவித்துள்ளார். பல்வேறு துன்புறுத்தல் மற்றும் புறக்கணிக்கப்பட்ட , பாதிக்கப்பட்ட 5,200 சிறார்கள் சிகிச்சை பெறுவதற்கு சமூந நலத்துறை உதவியிருப்பதாகவும் புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்திருப்பதாக அவர் கூறினார். உடல் ரீதியில் துன்புறத்தப்பட்ட 1,240 சம்பவங்கள் மற்றும் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்ட 1,603 சம்பவங்களுக்கும் சிறார்கள் உள்ளாகியுள்ளனர். இதைத் தவிர 156 சிறார்களை அவர்கள் பெற்றோர்கள் கைவிட்ட சம்பவங்களால், அந்த சிறார்கள் ஆதரவற்றவர்களாகி விட்டதையும் நான்சி சுக்ரி நாடாளுமன்றத்தில் கேள்விக்கு பதில் அளித்தபோது தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!