Latestமலேசியா

நாட்டில் 21 லட்சத்திற்கும் கூடுதலான வெளிநாட்டு தொழிலாளர்கள்

புத்ரா ஜெயா, ஜன 28 -இவ்வாண்டு பிப்ரவரி 15ஆம் தேதிவரை நாட்டில் 21 லட்சத்து 23,049 வெளிநாட்டு தொழிலாளர்கள் இருப்பதாக புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளன. இவற்றில் வங்காளதேச தொழிலாளர்கள் மட்டும் 7 லட்சத்து 86,795 பேர் இருக்கின்றனர். அதற்கு அடுத்த நிலையில் 4 லட்சத்து 96,083 இந்தோனேசிய தொழிலாளர்களும் , மூன்று லட்சத்து 67,498 நேப்பாள தொழிலாளர்களும் ஒரு லட்சத்து 63,324 மியன்மார் தொழிலாளர்களும், ஒரு லட்சத்து 19,706 இந்திய தொழிலாளர்களும் இருப்பதாக குடிநுழைவு துறையின் புள்ளி விவரம் மூலம் தெரியவந்துள்ளது.

இவ்வாண்டு ஜனவரி 1ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 23ஆம் தேதிவரை நாடு முழுவதிலும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் குடிநுழைவுத்துறை 14,361 சட்டவிரோத குடியேறிகளை கைது செய்துள்ளது. சட்டவிரோத குடியேறிகளை வேலைக்கு வைத்திருந்த 139 முதலாளிகளும் கைது செய்யப்பட்டனர். 1,959 மற்றும் 1,963 குடிநுழைவு சட்டத்தின் கீழ் சட்டவிரோத குடியேறிகளை வேலைக்கு வைத்திருப்பதும் குற்றமாகும் என்பதால் அந்த முதலாளிகள் கைது செய்யப்பட்டதாகக் குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ ரஸ்லின் ஜூசோ தெரிவித்தார். மலேசியா முழுதிலும் சட்டவிரோத குடியேறிகள் கூடும் 220 இடங்களில் தொடர்ந்து கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!