Latestமலேசியா

நாட்டில் 7 மாநிலங்களில் 20 பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவாகியுள்ளது

கோலாலம்பூர், ஆகஸ்ட்-28- இன்று காலை 9 மணி நிலவரப்படி, நாட்டில் ஏழு மாநிலங்களில் 20 பகுதிகளில் காற்றுத் தரக் குறியீடு (API) ஆரோக்கியமற்ற அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சரவாக் Sri Amanனில் மிக மோசமாக API குறியீடு 195 ஆகப் பதிவாகி ‘மிகவும் ஆரோக்கியமற்ற’ நிலையை நெருங்கி வருகிறது. அதற்கு அடுத்து Serian (173), Sarikei (153), Miri (120) மற்றும் Kuching (114) ஆகிய பகுதிகள் இருக்கின்றன.

கோலாலம்பூர், செராஸில் API குறியீடு 159 ஆக உள்ளது. Batu Mudaவில் 152 ஆகப் பதிவாகியுள்ளது. சிலாங்கூரில் Johan Setia (154), Shah Alam (152), Petaling Jaya (130) ஆகிய பகுதிகளிலும் ஆரோக்கியமற்ற அளவுகள் பதிவாகியுள்ளன.

நாட்டின் வட பகுதியிலும் அதே நிலை காணப்படுகிறது. பினாங்கு, Seberang Peraiயில் API குறியீடு 157 ஆக உள்ளது. Minden (156), Seberang Jaya (152) ஆகிய பகுதிகளிலும் ஆரோக்கியமற்ற நிலை நிலவுகிறது.

கெடாவில், Sungai Petani, Alor Setar, பேராக்கில் Taiping, Tasek Ipoh, Seri Manjung ஆகியவை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நெகிரி செம்பிலான் சிரம்பானில் API குறியீடு 108 ஆகப் பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் நாற்பத்தாறு பகுதிகள் மிதமான நிலையிலும், ஒரு பகுதி நல்ல நிலையிலும் உள்ளன.

API அளவீட்டில் 0 முதல் 50 வரை காற்றின் தரம் ‘நல்லது’ என்றும், 51 முதல் 100 வரை ‘மிதமானது’ என்றும், 101 முதல் 200 வரை ‘ஆரோக்கியமற்றது’ என்றும், 201 முதல் 300 வரை ‘மிகவும் ஆரோக்கியமற்றது’ என்றும், 300-க்கு மேல் இருந்தால் ‘ஆபத்தானது’ என்றும் கருதப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!