
குவாலா சிலாங்கூர், ஆகஸ்ட் 28 – குவாலா சிலாங்கூர் தஞ்சோங் காராங், ஜாலான் பெர்னாம், பத்து 11 சூராவ் (Surau Batu 11, Jalan Bernam) அருகேயுள்ள வாகனப் பட்டறையில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 7 வாகனங்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன.
இதில் நிசான் செரீனா மற்றும் மஸ்டா ஆகிய 2 கார்களும், 2 Yamaha SS Two மோட்டார் சைக்கிள்கள், 2 ஸ்கூட்டர்கள் மற்றும் ஒரு FI 115 மோட்டார் சைக்கிளும் உள்ளடங்கும்.
இரவ கிடைத்ததைத் தகவலை தொடர்ந்து, தஞ்சோங் காராங் மற்றும் குவாலா சிலாங்கூர் தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 9 தீயணைப்பு வீரர்கள், 2 தீயணைப்பு வாகனங்களில் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் அரை மணி நேரத்தில் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. இந்தச் சம்பவத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.



