Latestமலேசியா

கோலாலம்பூர் உணவு பெட்டிக்குள் கரப்பான் பூச்சிகள்; உணவகத்தை மூட உத்தரவு

கோலாலம்பூர், ஆகஸ்ட் 28 – கோலாலம்பூரிலுள்ள பார்பிக்யூ உணவகம் ஒன்றில் உணவுப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த பெட்டிக்குள் கரப்பான் பூச்சிகள் இருப்பது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அந்த உணவகத்தை மூட கோலாலம்பூர் மாநகராட்சி மன்றமான DBKL உத்தரவிட்டுள்ளது.

Threads தளத்தில் பகிரப்பட்ட காணொளியில், இறைச்சி வைக்கப்பட்டிருந்த தட்டுக்குள் பல பூச்சிகள் ஊர்ந்து செல்வதும், அருகில் இறால்கள் வைக்கப்பட்டிருந்ததும் காணப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த பதிவிட்டவர், உணவைச் சாப்பிடுவதற்கு முன் பொதுமக்கள் அதைச் சரிபார்க்குமாறு கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து DBKL-ன் சுகாதாரத் துறையின் Titiwangsa Zone 5, வளாக சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் அந்த உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

உணவு நிறுவனங்களுக்கான 2016ஆம் ஆண்டு விதிகளின் கீழ், ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 9, 2026 வரை உணவகத்தை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தக் காலத்தில் உணவக நிர்வாகம் சுத்தம் செய்தல் உள்ளிட்ட தேவையான சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என DBKL தெரிவித்துள்ளது

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!