Latestமலேசியா

சொக்சோ மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவர்களில் 70 % மீண்டும் வேலை வாய்ப்பு

கோலாலம்பூர், பிப் 28 – சொக்சோ மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவர்களில் 70 விழுக்காட்டினர் மீண்டும் வேலை வாய்ப்பை பெற்றனர். கடந்த 2019ஆம் ஆண்டு முதல் இவ்வாண்டு ஜனவரி மாதம்வரை மொத்தம் 10,695 பேர் சொக்சோ மறுவாழ்வு நிலையத்தில் பயிற்சி பெற்றதாக மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம் சீ கியோங் தெரிவித்தார். அவர்களில் 494 பேர் சபா மற்றும் சரவாவைச் சேர்ந்தவர்கள்.

சொக்சோ பயிற்சி மையங்களில் 90 விழுக்காடு சந்தா செலுத்துவோர் மற்றும் சொக்சோ சந்தா செலுத்தாத 10 விழுக்காட்டினர் மறுவாழ்வு சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெறுவற்கான தகுதியை கொண்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் சரவா ‘Serian GPS’ நாடாளுமன்ற உறுப்பின ‘Richard Riot’ எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தபோது ஸ்டீவன் சிம் சீ கியோங் தெரிவித்தார். சொக்சோ காப்புறுதியை பெற்றவர்கள் மற்றும் தொழிலாளர்கள் உடல் ரீதியில் தங்களை தயார்படுத்திக் கொள்வதற்கான தொழிற்பயிற்சி பெற்று தொழில் செய்யும் ஆற்றலை பெறும் வகையில் பயிற்சியை பெறுகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!