கோலாலம்பூர், ஏப் 1 – ஷா அலாம் மாநகரில் 500 தெருநாய்களை பிடித்து அவற்றை அழிப்பதற்காக பணிக்குழு ஒன்றை Shah Alam மாநகர் மன்றம் தொடங்கியிருப்பது குறித்து Selangor Tengku Permaisuri Norashikin சாடினார்.
தெரு நாய்களை கையாளும் விவகாரத்தில் ஊராட்சி மன்றங்கள் தவறான அணுகுமுறையை தவிர்த்துக்கொண்டு முழுமையான மற்றும் விவேகமான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். மேலும் தெரு நாய்களின் நடமாட்டத்தை நிர்வகிக்கும் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறையான SOP யையும் மறுஆய்வு செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
சிலாங்கூரில் தெரு நாய்களை பிடிக்கும் நடவடிக்கை குறித்த அணுகுமுறை தமக்கு ஏமாற்றத்தையும் கவலையையும் ஏற்படுத்தியிருப்பதாக Norashikin தெரிவித்தார். அண்மையில் வைரலாகிய ஷா அலாம் மாநாகர் மன்றம் உட்பட எந்தவொரு ஊராட்சி மன்றங்களும் நாய்களை பிடித்து அவற்றை கொல்லும் அணுகுமுறை தொடர்பில் தமக்கு உடன்பாடில்லை என்றும் அவர் கூறினார். பிரச்னையை தீர்ப்பதற்கு தெருநாய்களின் பெருக்கத்தை தவிர்ப்பதற்கு அவற்றிற்கு கருத்தடை செய்தல் உட்பட, சிக்கலைக் கட்டுப்படுத்த இன்னும் பல முறைகள் பயன்படுத்தப்படலாம் என்று நான் நம்புகிறேன். பிராணிகளை நேசிக்கும் குடியிருப்புவாசிகளின் ஒத்துழைப்போடு தெரு நாய்களுக்கு புகலிடம் அளிக்கும் மையங்களை ஊராட்சி மன்றங்கள் உருவாக்க வேணடும்.
இத்தகைய மையங்களை தயார்படுத்துவதற்கு அல்லது நிர்மாணிப்பதற்கு வீடமைப்பு மேம்பாட்டாளர்கள் கட்டாய நடவடிக்கை எடுப்பதையும் ஊராட்சி மன்றங்கள் வலியுறுத்த வேண்டும். தெரு நாய்கள் தொடர்பான விவகாரங்களை நிர்வகிப்பதற்கான புதிய , முழுமையான அணுகுமுறைகளை அனைத்து ஊராட்சி மன்ற உறுப்பினர்களும் அறிந்துகொள்ள வேண்டும் என்றும் தாம் விரும்புவதாக Selangor Tengku Permaisuri Norashikin வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.