Latestஉலகம்

நாய்கள் முதல் வகுப்பில் பயணிக்க ஏற்பாடு செய்த Bark Air; வானில் spa வசதியெல்லாம் உண்டு

நியூ யோர்க், மே-26 – அமெரிக்காவைச் சேர்ந்த Bark Air விமான நிறுவனம், நாய்களை முதல் வகுப்பில் பறக்கச் செய்து அசத்தியிருக்கிறது.

தொடக்கக் கட்டமாக நியூ யோர்க்கில் இருந்து லோஸ் ஏஞ்சல்ஸ் வரை வியாழக்கிழமை அப்பயணம் மேற்கொள்ளப்பட்டது.

தனது வளர்ப்பு நாயான Hugo-வுடன் நீண்ட பயணங்கள் மேற்கொள்வதில் சந்தித்த சிரமங்களின் அடிப்படையில், நாய்களுக்கென தனி விமானப் பயணங்கள் வேண்டும் என்ற யோசனை தனக்கு உதித்ததாக Bark Air-ரின் CEO Matt Meeker கூறினார்.

வானில் பறப்பதால், நாய்கள் பதற்றமடையாதிருக்கவும் வசதியாக அவை பயணிக்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பயமேதும் இல்லாமல் அவை பயணம் செய்வதை உறுதிச் செய்வதே எங்களின் கடப்பாடு என்கிறார் Matt Meeker.

சிறப்பம்சமாக நாய்களுக்கு spa வசதியும் பிரத்தியேக உணவு வகைகளும் பரிமாறப்படுகின்றன.

தங்களின் அந்த சொகுசு விமானத்தில் 15 பேர் வரை பயணிக்க முடியும் என்றாலும், தற்போதைக்கு 10 நாய்களுக்கு இடமளிக்க ஒரு விமானத்திற்கு 10 டிக்கெட்டுகளை விற்பனை செய்ய இலக்குக் கொண்டிருப்பதாக அவர் சொன்னார்.

ஒரு நபர் மற்றும் ஒரு நாய்க்கான ஒரு வழி அனைத்துலகப் பயணத்திற்கு கட்டணமாக 37,600 ரிங்கிட் விதிக்கப்படுகிறது.

அதே உள்நாட்டுப் பயணங்களுக்கு $6,000 வசூலிக்கப்படுகிறது.

நட்டத்திலேயே அத்திட்டத்தைத் தொடங்கியிருப்பதால் தான் விலை சற்று அதிகம் எனக் கூறி CEO, வரவேற்பைப் பொறுத்து எதிர்காலத்தில் விலைக் குறையலாம் என்றார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!