Latestஉலகம்

நியூயார்க்கில், தீயில் அழிந்த பெராரி செசுகு கார் ; RM1 மில்லியன் விலையில் விற்பனை

நியூயார்க், மே 15 – அமெரிக்கா, நியூயார்க்கில், தீக்கிரையாகி துருப்பிடித்த அடையாளம் காணப்பட்ட போதிலும், 1972-ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட “பெராரி” ரக கார் ஒன்று, ஒரு லட்சத்து 20 ஆயிரம் யூரோ அல்லது ஏழு லட்சத்து 11 ஆயிரத்து 144 ரிங்கிட் விலையில் விற்கப்பட்டது, பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

டினோ பெராரி 246GT ரகத்தை சேர்ந்த அக்கார் இதற்கு முன் தீக்கிரையானதாக கூறப்படுகிறது. அதன் உடல் பகுதியில், தீ பிடித்த அடையாளமும், துருப்பிடித்த அடையாளமும் நிறைந்து காணப்படுகின்றன.

எனினும், அதனை பொருட்படுத்தாது, அக்காரை வாங்கிய நபர், தெரிந்தே “டயர்கள் இல்லாத துருப்பிடித்த இரும்பை” வாங்கியுள்ளதாக விமர்ச்சனங்கள் எழுந்துள்ளன.

அக்காரை, நியூயார்க்கிலுள்ள, குல்விங் மோட்டார்ஸ் கார்ஸ் எனும் நிறுவனம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போதைய சந்தை நிலவரப்படி, சீரான நிலையில் இருக்கும் டினோ பெராரி 246GT ரக காரின் விலை, ஆறு லட்சத்து 30 ஆயிரம் யூரோ அல்லது 37 லட்சத்து 30 ஆயிரம் ரிங்கிட் ஆகும்.

எனினும், சேதமடைந்திருந்தாலும்,மிகவும் குறைவான விலையில் அக்கார் வாங்கப்பட்டுள்ளதாக, ஏல நிறுவனம் கூறியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!