Latestமலேசியா

நீர் பயனீட்டை 10 விழுக்காடு குறைப்பீர்; பினாங்கு மக்களுக்கு வலியுறுத்து

கோலாலம்பூர், மார்ச் 18 – தனது அனைத்து பயனீட்டாளர்களும் நீர் பயனீட்டை 10 விழுக்காடு குறைத்துக்கொள்ளும்படி பினாங்கு நீர் விநியோக கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.

வியாழன் முதல் ஞாயிறு வரை சுங்கை மூடாவின் நீர்மட்டம் 1.71மீட்டர் முதல் 1.89 மீட்டர்வரை மாறுபட்டதோடு , செபராங் பிறையில் ‘Lahar Tiang’ரையில் நீர் மட்டம் 2 மீட்டர் அளவுக்கு பாதுகாப்பான நிலைக்கும் குறைவாக இருந்ததாக பினாங்கு நீர் விநியோக கழகத்தின் தலைமை செயல் அதிகாரி கே பத்மநாதன் தெரிவித்திருக்கிறார்.

கெடாவில் உள்ள 120 பில்லியன் லிட்டர் முடா அணை, சுங்கை மூடாவில் தண்ணீர் திறந்துவிட்டதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை அதன் நீர் அளவு 48.6 விழுக்காடு குறைந்துள்ளது.

அதிர்ஷ்டவசமாக, சுங்கை மூடாவுக்கு நீர் கிடைக்கும் ‘Beris’அணையில் அன்றைய தினம் 98.6 விழுக்காடு நீர்இருந்தது என இன்று வெளியிட்ட அறிககையொன்றில் பத்மநாதன் தெரிவித்தார்.

சுங்கை மூடாவில் இருந்து தேவையை பூர்த்தி செய்ய முடிந்த அளவு சுத்திகரிக்கப்படாத தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், அணைகளில் இருந்து சுங்கை மூடாவுக்கு தண்ணீர் விடுவது கெடா அதிகாரிகளின் கையில் உள்ளது.

இருப்பினும், சுங்கை மூடாவிலிருந்து போதுமான தண்ணீரை எடுக்க முடியாத நிலையில், விரிவாக்கப்பட்ட ‘MengKuang’ அணையிலிருந்து ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 600 மில்லியன் லிட்டர் வரை எடுக்க பினாங்கு நீர் விநியோக கழகம் தயாராக இருப்பதாக அவர் கூறினார்.

‘Air Itam’ அணைக்கட்டில் வெள்ளிக்கிழமை 38.1 விழுக்காடு நீர் இருந்தது. ஞாயிற்றுக்கிழமை அந்த அணைக்கட்டில் 37.3 விழுக்காடு நீர் குறைந்துள்ளது.

‘Air Hitam’ நீர் சுத்திகரிப்பு நிலையம் அதிகரித்த தேவையை பூர்த்தி செய்ய 25 மில்லியன் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை உற்பத்தி செய்ய வேண்டும், என்று அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!