
கோலாலாம்பூர், ஜூலை-7 – e-Sports மற்றும் gaming பிரியர்களுக்கு ஒரு நற்செய்தி…
கோலாலம்பூர், பழையக் கிள்ளான் சாலையில் உள்ள M Aurora விற்பனைக்கூட வளாகத்தில் பிரம்மாண்ட கால்பந்து gaming போட்டி நடத்தப்படவுள்ளது.
வரும் ஜூலை 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த ‘E SPORTS FC’ gaming தொடரில், விளையாட்டாளர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி கால்பந்து பரிசுகளை வெல்ல முடியும்.
இப்போட்டியின் முக்கிய அங்கமாக, ஜூலை 18-ஆம் தேதி மதியம் 2 மணிக்கு, பிரபல சொத்துச் சந்தை நிபுணர் Sean (iherng) பங்கேற்கும் பிரத்யேக சொத்து முதலீட்டுப் பகிர்வு அமர்வும் நடைபெறவுள்ளது.
அத்துடன், M Aurora-வின் புதிய கோபுரத்தின் புதிய யூனிட்களைப் பார்வையிடவும், பிரத்தியேக சலுகைகளைப் பெறவும் அங்குள்ள சொத்து ஆலோசகர்களை நீங்கள் நாடலாம்.
நிகழ்வில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் இலவச சிற்றுண்டிகள் வழங்கப்படும்.
இந்த உற்சாகமான வார இறுதி நிகழ்வில் கலந்துகொள்ள, உடனே திரையில் காணும் RSVP link இணைப்பு அல்லது 03-9078 3999 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு உங்கள் இடத்தை முன்பதிவு செய்யுங்கள்…



