Latestமலேசியா

நோன்புப் பெருநாளுக்கு ஏப்ரல் 8,9-ஆம் தேதிகளில் இலவச டோல் கட்டணம்

கோலாலம்பூர், மார்ச் 29 – நோன்புப் பெருநாளை ஒட்டி இரண்டு நாட்களுக்கு இலவச Toll கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் வகுப்பு வாகனங்கள் அதாவது தனியார் வாகனங்களுக்கு ஏப்ரல் 8-ம் 9-ம் தேதிகளில் அச்சலுகை வழங்கப்படும் என பொதுப்பணித் துறை அமைச்சு தெரிவித்தது.

8-ம் தேதி அதிகாலை 12.01 மணி தொடங்கி செவ்வாய்க்கிழமை இரவு 11.59 மணிக்கு அச்சலுகை முடிவுக்கு வரும்.

நாட்டின் எல்லைப் பகுதியில் உள்ள ஜொகூரின், சுல்தான் இஸ்கண்டார் கட்டட டோல் சாவடி மற்றும் தஞ்சோங் குப்பாங் டோல் சாவடிகளைத் தவிர்த்து நாட்டில் உள்ள மற்ற அனைத்து டோல் சாவடிகளிலும் அவ்விரு நாட்களுக்கு அச்சலுகையை வாகனமோட்டிகள் அனுபவிக்கலாம்.

இதனால் அரசாங்கம் 3 கோடியே 76 லட்சம் ரிங்கிட்டை இழப்பீட்டுத் தொகையாக நெடுஞ்சாலைப் பராமரிப்பு நிறுவனங்களுக்கு வழங்க வேண்டியிருக்கும்.

என்றாலும், மக்கள் நலனில் அக்கறைக் கொண்டு, வாழ்க்கைச் செலவினத்தைக் குறைப்பதில் ஒற்றுமை அரசாங்கம் கடப்பாடுக் கொண்டிருப்பதால், இந்த விழாக்கால toll சலுகை வழங்கப்படுவதாக அமைச்சு விளக்கியது.

இவ்வேளையில் நெடுஞ்சாலைகளில் நெரிசலைக் குறைக்கும் முயற்சியாக PLUS நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நிலைக்குத்தும் பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள 18 இடங்களில் Smart Lane பாதை திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!