
இந்தோனேசியா, ஜூலை 17 – இந்தோனேசியாவில் 17 வயது மாணவர் ஒருவர் கையால் தயாரித்த வெடிகுண்டை பள்ளிக்கு கொண்டு வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலீசாரின் ஆரம்பகட்ட விசாரணையில், பள்ளியில் பகடிவதையால் ஏற்பட்ட மனஅழுத்தமே இதற்குக் காரணம் என தெரியவந்துள்ளது. மேலும், இணையத்தின் மூலம் வெடிபொருள் தயாரிக்கும் முறையை கற்றுக்கொண்டு, வீட்டிலேயே பெற்றோருக்குத் தெரியாமல் வெடிகுண்டை தயாரித்ததாகவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
பள்ளி பாதுகாப்பு காவலர் முதலில் சந்தேகத்திற்கிடமான பொருளைக் கண்டுபிடித்ததைத் தொடர்ந்து, வகுப்பறை அருகே ஒரு சிறிய வெடிப்பு ஏற்பட்டது. இதில் யாருக்கும் காயமோ உயிரிழப்போ ஏற்படவில்லை.
இந்த வழக்கின் உண்மையான காரணத்தை கண்டறிய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



