Latestமலேசியா

பங்சாரில் புயல் காற்று; அடுக்குமாடியின் கூரை பறந்து போய் விழுந்ததில் வாகனங்கள் சேதம்

கோலாலம்பூர், மே-26 – கோலாலம்பூர், பங்சாரில் நேற்று மாலை கடும் மழையின் போது வீசியப் புயல் காற்றில், அடுக்குமாடிக் குடியிருப்பின் மேற்கூரை பிய்த்துக் கொண்டு பறந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பறந்துப் போன கூரையின் zink தகடுகள் கீழே விழுந்ததில், 6 கார்களும் 3 மோட்டார் சைக்கிள்களும் சேதமடைந்தன.

நல்ல வேளையாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

பங்சார், Putra Ria அடுக்குமாடி குடியிருப்பின் 94-வது புளோக்கில் நிகழ்ந்த அச்சம்பவத்தின் கொணொலிகளும் புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளன.

பெரிய சத்தத்துடன் கூரை பறந்துச் சென்று விழுந்ததைத் கண்டு ஒரு கணம் அதிர்ச்சியில்லஉறைந்துப் போனதாக அங்குள்ள மக்களில் சிலர் கூறினர்.

22-வது மாடியில் உள்ள ஒரு வீட்டின் கூரை முற்றிலுமாக பிய்த்துக் கொண்டு பறந்திருப்பதால், அவ்வீட்டை உடனடியாகப் பழுது பார்க்க வேண்டியிருப்பதாக குடியிருப்பாளர்கள் சங்கம் கூறியது.

அக்கூரைகள் 10 முதல் 20 ஆண்டுகள் பழமையானவை என்றும் கூறப்படுகிறது.

அச்சம்பவம் குறித்து DBKL-லிடமும் புகார் செய்யப்பட்டுள்ள வேளை, Lembah Pantai நாடாளுமன்ற உறுப்பினர் சார்பில் உரிய உதவிகள் வழங்கிட நடவடிக்கை அறையும் திறக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!