Latest
‘பசார் புடுவில்’ அதிரடி சோதனை; 22 வியாபாரிகள், 16 வெளிநாட்டவர்கள் சிக்கினர்

கோலாலம்பூர், ஜூன் 10 – கோலாலம்பூர், ஜாலான் யூவிலுள்ள பசார் புடுவில் (Pasar Pudu) நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், உரிமம் இல்லாமல் வியாபாரம் செய்த 22 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் அவர்களில் 13 பேர் வெளிநாட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கோலாலம்பூர் மாநகராட்சியான DBKL மற்றும் குடிநுழைவுத் துறை இணைந்து மேற்கொண்ட சோதனையில், வியாபாரப் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த ஒரு கடைக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும், 62 வெளிநாட்டவர்கள் சோதனையிடப்பட்டதில், செல்லுபடியாகும் ஆவணங்கள் இல்லாததால் 16 பேர் கைது செய்யப்பட்டனர்.
சட்டவிரோத வியாபாரம் மற்றும் குடிநுழைவு சட்ட மீறல்களை கட்டுப்படுத்த இதுபோன்ற சோதனைகள் தொடர்ந்து நடத்தப்படும் என DBKL தெரிவித்துள்ளது.



