Latestமலேசியா

பண்டார் துன் ஹுசேன் ஓன்னில் சாலை சமிக்ஞை விளக்குச் சந்திப்பில் கோர விபத்து: 18 வயது குளிரூட்டும் சாதன தொழில்நுட்ப வல்லுநர் பலி

கோலாலம்பூர், ஜூலை-13-Bandar Tun Hussein Onn, Lebuh Utama அருகே சாலை சமிக்ஞை விளக்குச் சந்திப்பில் மோட்டார் சைக்கிள் காருடன் மோதியதில் குளிரூட்டும் சாதன தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர் உயிரிழந்தார்.

நேற்றிரவு ஏறக்குறைய 11.30 மணியளவில் நிகழ்ந்த அவ்விபத்தில் 18 வயதான அந்த உள்நாட்டு இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது உறுதிச் செய்யப்பட்டதாக காஜாங் மாவட்ட காவல்துறைத் தலைவர், உதவி கமிஷனர் Naazron Abdul Yusof தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட கார் Suadamai சாலையில் இருந்து வந்து கொண்டிருந்தது. அக்கார் Lebuh Utama சந்திப்பில் நுழைந்த போது, எதிர் திசையிலிருந்து வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளில் மோதியது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கார் ஓட்டுனரான 67 வயதான உள்ளூர் ஆடவருக்குக் காயம் ஏற்படவில்லை. விபத்தில் மரணமடைந்த நபரின் சடலம் செர்டாங் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டதாக Naazron கூறினார்.

அச்சம்பவம் 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது. குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், காரோட்டிக்கு ஐந்து முதல் பத்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், RM20,000 முதல் RM50,000 வரை அபராதமும் விதிக்கப்படலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!