Latestமலேசியா

பத்திரிக்கை சுதந்திரத்தை ஒடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடாதீர்; அரசியல்வாதிகளுக்கு பாமி நினைவுறுத்தல்

கூச்சிங், மே 24 – ‘ஊடகங்களில் வெளியிடப்படும் கூற்றில் நமக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம்; ஆனால் அதற்கு பதில்கொடுக்கும் உரிமை நமக்கு உண்டு. அதைவித்து பத்திரிக்கை சுதந்திரத்தை ஒடுக்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டாம் என பாமி அரசியல்வாதிகளுக்கு நினைவுறுத்தியுள்ளார்.
தகவல்களை மக்களிடையே கொண்டுச் சேர்ப்பதில் ஊடகவியலாளர்கள் முக்கியப் பங்காற்றுகிறார்கள் என்பதை நாம் உணர வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்மையில், தமிழ் ஊடகவியாளாளர்கள் மீது அரசியல்வாதி ஒருவர் சட்ட மிரட்டல் மற்றும் தொழிலதிபர் ஒருவர் நடத்திய தனிநபர் தாக்குதல் விவகாரம் குறித்து பேசிய அமைச்சர் பாமி பாட்சில், அது தொடர்பாக கூடுதல் தகவல்களை கேட்டிருப்பதாகவும், விரைவில் சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு சுமூகமான தீர்வை வழங்க நடவடிக்கை எடுக்கவிருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஊடகவியளாளர்களுக்கான HAWANA2024 நிகழ்ச்சிக்காக சரவாக் சென்றுள்ள அமைச்சர், அங்கு சரவாக் கவர்னர் வான் ஜுனைடி துவாங்கு ஜாஃபரின் மரியாதை நிமித்த அழைப்பை ஏற்று அவரைச் கூச்சிங்கில் உள்ள அஸ்தானாவில் சந்தித்தபோது தமதுரையில் இவ்வாறு கூறினார்.
“பத்திரிகையாளர்களின் பாதுகாப்பை அச்சுறுத்தும் எந்தவொரு செயலையும் நான் வண்மையாக கண்டிக்கிறேஎன்,” என வலியுறுத்தி பேசிய அவர், சம்பந்தப்பட்ட இரு தரப்புகளையும் சந்திக்க தாம் தயார் என்றும் குறிப்பிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!