Latestமலேசியா

பத்துமலை திருத்தலத்தில் திருக்குர்ஆன் வாசிக்கப்பட்ட சம்பவம்; ஆட்சேபித்து சுமார் 600 இந்துக்கள் பத்துமலையில் அமைதிப் பேரணி

கோலாலம்பூர், ஜூன் 2 – பத்துமலை திருத்தலத்தில் உள்ள 42 மீட்டர் உயரம் கொண்ட முருகன் சிலைக்கு அருகே அண்மையில் மொரோக்கோவைச் சேர்ந்த யூடியுப்பாளர் ஒருவர் திருக்குர்ஆன் வசனத்தை படித்ததற்கு ஆட்சேபத்தை தெரிவிக்கும் வகையில் நேற்று பத்துமலை திருத்தலத்தில் சுமார் 600 இந்துக்கள் அமைதியாக கூடினர். அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் தேவார பாடலகளையும் பாடினர். எந்தவொரு சர்ச்சையும் இன்றி அமைதியான முறையில் இறைப்பணியில் ஈடுபட முடியும் என்பதை வெளிப்படுத்தும் வகையில் இந்த நிகழ்வு அமைந்ததாக தேவாரா குழுவுக்கு தலைமையேற்றிருந்த Swahana Subramaniyam வெளியிட்டிருந்த அறிக்கையில் தெரிவித்தார். அந்த நிகழ்வை Rajeswary Apahu மற்றும் இந்த தொண்டூழியர் இயக்கத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் கெடா மற்றும் சிங்கப்பூர் போன்ற தொலை தூரத்திலிருந்தும் பலர் வருகை புரிந்ததாக அரசு சார்பற்ற இயக்கமான உலகளாவிய மனித உரிமை சம்மேளனத்தின் தலைவர் S.Shasi Kumar தெரிவித்தார்.

மொரோக்கோவின் Abdellatif Quisa அண்மையில் பத்துமலை திருத்தளத்தில் திருக்குர் ஆன் வசனத்தை வாசித்த நடவடிக்கையை சசிக்குமார் சாடினார். அனைத்து வழிபாடு இடங்களையும் மதிக்கும் பண்பு இருக்க வேண்டும் என்றும் அப்போதுதான் நாம் அமைதியாகவும் ஐக்கியத்தோடும் வாழமுடியும் என சசி தெரிவித்தார். பத்துமலை திருத்தலம் ஒரு வரலாற்றுப்பூர்வ இடம் என தாம் நம்பியதால் அங்கு திருக்குர் ஆன் வசனங்களை வாசித்ததாகவும் அதற்காக Abdellatif Ouisa மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!