Latestமலேசியா

பத்து பஹாட்டில் தீ விபத்து; 5 கார்கள், 17மோட்டார் சைக்கிள்கள் அழிந்தன

பத்து பஹாட், மே 28 – Batu Pahat , Taman   Bukit  Perdana வில் நிகழ்ந்த தீ விபத்தில்  ஐந்து கார்கள் மற்றும்  17 மோட்டார் சைக்கிள்கள்  அழிந்தன.  நேற்று மாலை மணி  4.30அளவில்  நிகழ்ந்த அந்த தீவிபத்தில்    Naza Ria,  Toyata Estima,  Proton Waja, Honda ferio,  மற்றும்   Perodua  Alza  ஆகிய  கார்கள் அழிந்தன.  இந்த தீவிபத்தில் தமக்கு  சொந்தமான  Honda Ferio  காரும்   மூன்று மோட்டார் சைக்கிள்களும்  அழிந்ததாக  குடியிருப்பு வாசிகளில் ஒருவரான    60 வயதுடைய    Hasanuman Idris தெரிவித்தார்.  இதனால் தமக்கு சுமார்   20,000 ரிங்கிட்வரை இழப்பு ஏற்பட்டதாக அவர் கூறினார். 

 வீட்டின் கார் நிறுத்துமிடத்தில்   கார்,  மோட்டார் சைக்கிள்கள்  மற்றும் தமது வியாபார பொருட்களையும் வைத்திருந்ததாகவும்  அவை அனைத்தும் தீயில்  அழிந்துவிட்டதாக அவர்  வேதனையோடு தெரிவித்தார்.  நல்ல வேளையாக   தனது  மகன் இரண்டு கார்களை வெளியேற்றி விட்டதால் அவற்றை பாதுகாக்க முடிந்தது என   அவர் கூறினார்.   தீயை அணைப்பதற்கு  குடியிருப்பு வாசிகள் பலர்  போராடியபோதிலும் தீ வேகமாக பரவியதால்   ஒன்றும் செய்ய முடியவில்லை. இந்த  சம்பவம் நடந்தபோது  பெரும்பாலும் பெண்கள்தான் வீட்டில் இருந்தனர் .எனவே அவர்களாலும்  ஒன்றும் செய்ய முடியவில்லையென   ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஒருவர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!