Latestமலேசியா

பள்ளிகளில் வெடிகுண்டு மிரட்டல்கள் எஃபி.ஐ. இண்டர்போல் உதவியை புக்கிட் அமான் நாடியது

கோலாலம்பூர், நவ 29 – ஜொகூர் மாநிலத்திலுள்ள ஆறு தனியார் பள்ளிகள் மின்அஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்களை பெற்றது தொடர்பில் தொடர்பில் அமெரிக்காவின் கூட்டரசு உளவு நிறுவனமான FBI மற்றும் அனைத்துலக போலீசான “Interpol” உதவியை புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் நாடியுள்ளது. புதிய மிரட்டல்கள் எதுவும் இன்றுவரை பெறவில்லையென ஜொகூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ கமாருல் ஸாமான் மாமட் தெரிவித்திருக்கிறார்.

கடந்த வாரம் ஜொகூர் மாநிலத்திலுள்ள ஆறு தனியார் பள்ளிகள் வெடிகுண்டு மிரட்டல்களை பெற்றதாக தங்களுக்கு புகார் கிடைத்துள்ளதாவும் இது தொடர்பான விசாரணை அறிக்கை அடுத்த கட்ட நடவடிக்கைக்காக புக்கிட் அமானுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கமாருல் ஸாமான் மாமட் கூறினார். பெர்மாஸ் ஜெயா, மசாய், கெலாங் பதாஹ், குலாய் மற்றும் மூவாரிலுள்ள அந்த தனியார் பள்ளிகள் ஒரே மின்னஞ்சல் கணக்கிலிருந்து நவம்பர் 21 ஆம் தேதி காலை 11 மணிக்கும் மாலை மணி 6.18க்குமிடையே வெடிகுண்டு மிரட்டலை பெற்றதாக அவர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!