Latestஉலகம்

ரஷ்யாவால் தேடப்படுவோர் பட்டியலில் புதிதாக யுக்ரேய்னிய அதிபரும் சேர்க்கப்பட்டார்

மோஸ்கோ, மே-5, தனது நேர் எதிரியான யுக்ரேய்னிய அதிபர் Volodymyr Zelensky-யை தேடப்படுவோர் பட்டியலில் ரஷ்யா இணைத்துள்ளது.

சனிக்கிழமையன்று புதுப்பிக்கப்பட்ட ரஷ்ய உள்துறை அமைச்சின் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் தான் Zelensky இடம் பெற்றுள்ளார்.

குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்த யுக்ரேனியத் தலைவர் தேடப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டது.

மேற்கொண்டு விவரம் எதுவும் அப்பக்கத்தில் இல்லை.

Zelensky திடீரென இப்போது அப்பட்டியலில் இணைக்கப்பட்டதற்கான காரணத்தை ரஷ்ய அதிகாரத் தரப்பில் இருந்தும் உடனடியாக விளக்கவில்லை.

2022 பிப்ரவரியில் யுக்ரேய்ன் மீது படையெடுத்த நாளில் இருந்தே Zelensky மீது மோஸ்கோ குறி வைத்திருந்தது.

Zelensky-யும், தம்மைக் கொல்ல மேற்கொள்ளப்பட்ட சதித் திட்டங்கள் ஐந்தாறு தடவை முறியடிக்கப்பட்டதை தாம் அறிவேன் என கடந்தாண்டுக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பல்லாயிரக்கணக்கானோர் இடம் பெற்றுள்ள தேடப்படுவோர் பட்டியலில் சில வெளிநாட்டு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் பெயர்களையும் ரஷ்யா இணைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன் பிப்ரவரியில் எஸ்தோனியா நாட்டு பிரதமர் Kaja Kallas தேடப்படுவோர் பட்டியலில் சேர்க்கப்பட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!