
ஜாசின், பிப்ரவரி-6-பள்ளிப் பேருந்தில் 14 வயது மாணவனைப் பாலியல் தாக்குதலுக்கு ஆளாக்கிய சந்தேகத்தில் மலாக்கா ஜாசினில் 50 வயது பள்ளிப் பேருந்து ஓட்டுநர் 7 நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அன்றிவு மகனிடம் சில மாறுதல்களை கண்ட தாய்க்கு, அவன் எதையோ மறைக்க முயல்வதாக சந்தேகம் எழுந்தது.
பின்னர் தாய் மிரட்டிக் கேட்ட போது, பிற்பகல் 3 மணியளவில் பேருந்தினுள் யாரும் இல்லாத போது ஓட்டுநர் தம்மிடம் தவறாக நடந்துகொண்ட உண்மையை மகன் கூறியிருக்கிறான்.
Kesang-கில் சாலையோரமாக பேருந்தை நிறுத்தி, கதவுகளை மூடி விட்டு அவ்வாடவர் அச்செயலில் ஈடுபட்டுள்ளார்.
சுமார் 5 நிமிடங்களுக்கு ஓட்டுநரின் இச்சைக்கு மாணவன் கட்டாயப்படுத்தப்பட்ட பிறகே, கதவுகள் திறக்கப்பட்டு அவன் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளான்
விஷயத்தைக் கேட்டு அதிர்ந்துபோன ஓர் ஆசிரியையுமான 39 வயது தாய், இரவோடு இரவாக Kesang போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
பாதிக்கப்பட்ட மாணவன், மலாக்கா மருத்துவமனையில் மேல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளான்.



