Latestமலேசியா

மார்ச் மாதத்தில் 5,900 பேர் வேலை இழந்தனர்

கோலாலம்பூர், ஏப்-15-மலேசியாவில் மார்ச் மாதத்தில் 5,900 வேலை இழப்புகள் பதிவாகியுள்ளன.

அவற்றில் சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில் அதிக எண்ணிக்கையிலானோர் வேலை இழந்துள்ளனர்.

சிலாங்கூரில் 29.3 விழுக்காடு பாதிப்புகளும், அதைத் தொடர்ந்து கோலாலம்பூரில் 25.6 விழுக்காடு பாதிப்புகளும் பதிவாகியுள்ளதாக PERKESO தரவுகள் மற்றும் ஹோங் லியோங் முதலீட்டு வங்கியின் தகவல் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த வேலை இழப்புகள் தயாரிப்பு தொழில்துறை, மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம் தவிர தகவல் தொடர்புத் துறைகளிலும் குவிந்திருந்தன.

பிப்ரவரியில் 7,500 ஆக இருந்த பாதிப்புகளின் எண்ணிக்கை தற்போது குறைந்திருந்தாலும், தொழிலாளர் தேவை அதிகரித்து, காலிப் பணியிடங்கள் 107,000 ஆக உயர்ந்திருந்த நேரத்தில் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது.

உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகள் இருந்தபோதிலும், உள்நாட்டு மற்றும் ஏற்றுமதித் தேவையின் ஆதரவுடன் தொழிலாளர் சந்தை இன்னும் மீட்சியைக் கொண்டதாக இருப்பதைக் குறிக்கும் வகையில், வேலையின்மை விகிதம் 2.9 விழுக்காடாக நிலையாக இருந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!