Latestமலேசியா

4,276 குடும்ப வன்செயல் சம்பவங்களை சமூக நலத்துறை பதிவு செய்துள்ளது

கோலாலம்பூர், ஏப்-15-2021 ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 4,276 குடும்ப வன்முறை சம்பவங்களை சமூக நலத்துறை பதிவு செய்துள்ளது.

இந்தக் காலகட்டம் முழுவதும் 3,929 சம்பவங்களில் பெண்களே அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர் என்றும், மேலும் 347 விவகாரங்கள் ஆண்களைப் பாதித்துள்ளன என்று சமூக நலத்துறையின் சட்ட மற்றும் அமலாக்கப் பிரிவின் இயக்குநர் இஸ்மாயில் அருள் ராஜ் கூறினார்.

முன்கோபமுள்ள ஒருவரின் நடத்தை உட்பட, குடும்ப வன்முறைக்கு ஐந்து முக்கிய அம்சங்கள் காரணங்களாக இருப்பதாக சமூக நலத்துறையின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இது தவிர, தவறான புரிதல்கள், குற்றம் செய்பவர் போதை பொருளுக்கு அடிமையாக இருப்பது மற்றும் நிதிப் பிரச்ச்னைகளை எதிர்கொள்வது, பொறாமை ஆகியவை அடையாளம் காணப்பட்ட மற்ற காரணங்களில் அடங்கும் என இஸ்மாயில் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவருக்குக் காயம் ஏற்படுத்துதல் அல்லது உடல்ரீதியாகத் துன்புறுத்துதல் உள்ளிட்ட பல பிரிவுகளில், அதிக எண்ணிக்கையிலான குடும்ப வன்முறைப் புகார்களை சமூக நலத்துறை பதிவு செய்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!