Latestமலேசியா

பாகானில் நவீன இந்து மயானம் அமைக்க கூடுதலாக RM1 மில்லியன் ஒதுக்கீடு – பிரதமர் அன்வார்

பாகான், ஆகஸ்ட்-24-பினாங்கு, பாகானில் நவீன இந்து மின்மயானம் அமைக்கும் திட்டத்திற்காக, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மேலும் ஒரு மில்லியன் ரிங்கிட் கூடுதல் நிதியை பினாங்கு இந்து அறப்பணி வாரியத்திற்கு ஒதுக்கியுள்ளார்.

இதன் மூலம், இத்திட்டத்திற்கான மொத்த நிதி ஒதுக்கீடு 2.5 மில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்துள்ளதாக வாரியத் தலைவர் RSN ராயர் தெரிவித்தார்.

செபராங் பிறை வாழ் இந்து சமூகத்திற்கு மிகவும் அவசியமான இந்த இரண்டாவது நவீன மின்மயானத்தை அமைக்க முந்தைய நிதி போதுமானதாக இல்லை என அவர் குறிப்பிட்டார்.

சுமார் 4,000 சதுர அடி பரப்பளவில் அமையவுள்ள இக்கட்டமைப்பு, அடுத்தாண்டு மத்தியில் முழுமையாக கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இறுதிச் சடங்குகளை வசதியாகவும் கண்ணியமாகவும் நடத்த இது பெரிதும் உதவும் என பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!