Latestமலேசியா

சண்டாக்கான்: மின்கம்பம் நடும் பணியின் போது மின்சாரம் தாக்கி ஒப்பந்தத் தொழிலாளி பலி

சண்டாக்கான், ஆகஸ்ட்-23 – சபா, சண்டாக்கானில் மின்கம்பம் நடும் பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்தத் தொழிலாளி ஒருவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Jai என அடையாளம் காணப்பட்ட 30 வயது அவ்வாடவர், நேற்றிரவு சுமார் 7.40 மணியளவில் மின்கம்பத்தில் பணியில் இருந்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளானார்.

​தகவலறிந்து விரைந்து வந்த சண்டாக்கான் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், மின் இணைப்பைத் துண்டித்த பின்னர், சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி மின்கம்பத்தில் இருந்த அவரது சடலத்தை மீட்டனர்.

​சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவ அதிகாரிகள் உறுதிச் செய்ததைத் தொடர்ந்து, அவரது உடல் அடுத்தகட்ட விசாரணைக்காக போலீஸிடம் ஒப்படைக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!