Latestமலேசியா

பாசிர் கூடாங்கில், சாலை குழியில் விழுந்து விபத்துக்குள்ளான நபருக்கு ; RM721,000 இழப்பீடு வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு

கோலாலம்பூர், ஏப்ரல் 29 – ஜோகூர், பாசிர் கூடாங்கில், பராமரிக்கப்படாத சாலை குழியில் விழுந்து காயமடைந்த மோட்டார் சைக்கிளோட்டி ஒருவருக்கு, சாலை பராமரிப்பு நிறுவனம் ஒன்று இழப்பீடு வழங்க வேண்டுமென, ஜோகூர் பாரு செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

49 வயது ரசாலி முஹமட் லீ சுபே எனும் அந்த மோட்டார் சைக்கிள் ஒட்டி தமது தரப்பு வாதத்தை முறையாக நிரூபித்ததை அடுத்து, அவருக்கு, மாநில அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட Safwa Global Venture நிறுவனம், ஏழு லட்சத்து 21 ஆயிரம் ரிங்கிட்டை இழப்பீடாக வழங்க வேண்டுமென நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

2021-ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 11-ஆம் தேதி, இரவு மணி பத்து வாக்கில், பாசிர் கூடாங், தாமான் கோத்தா மாசாயிக்கு அருக்கில் அவ்விபத்து நிகழ்ந்தது.

சம்பவ இடத்தில் இருந்த சாலை குழியை மோதி கீழே விழுந்ததில், ரசாலி காயமடைந்தார்.

அதனால், சம்பந்தப்பட்ட பராமரிப்பு நிறுவனத்திற்கும், மாநில அரசாங்கத்திற்கும் எதிராக அவர் வழக்கு தொடுத்திருந்தார்.

எனினும், 2022-ஆம் ஆண்டு, மே 16-ஆம் தேதி, மாநில அரசாங்கத்துக்கு எதிரான வழக்கை ரசாலி மீட்டுக் கொண்டார்.

பல முறை வாய்ப்பு வழங்கப்பட்ட போதிலும், சம்பந்தப்பட்ட நிறுவனம், எழுத்துப்பூர்வ அல்லது வாய்வழி வாதங்களை தாக்கல் செய்யத் தவறியுள்ளதோடு, பாதிக்கப்பட்டவர் தனது தரப்பு வாதத்தை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளார்.

அதோடு, 2021-ஆம் ஆண்டு, விபத்து நிகழ்ந்த நாளில் இருந்து, 2022-ஆம் ஆண்டு வரையில், விபத்துக்கு காரணமான அந்த குழி சீரமைக்கப்படவில்லை.

அதனால் பாதிக்கப்பட்ட நபருக்கு மூன்று லட்சத்து 52 ஆயிரத்து 947 ரிங்கிட் 33 சென்னை சீறப்பு இழப்பீடாகவும், மூன்று லட்சத்து 68 ஆயிரம் ரிங்கிட்டை பொது இழப்பீடாகவும் வழங்கி தீர்ப்பளிப்பதாக நீதிபதி அறிவித்தார்.

எனினும், அந்த தீர்ப்பை எதிர்த்து சம்பந்தப்பட்ட சாலை பராமரிப்பு நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யுமென கூறப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!