Latestமலேசியா

பாதுகாப்பற்ற சருமத்தை பளிச்சிட செய்யும் தயாரிப்புகளின் மறுபக்கம்

கோலாலம்பூர், மார்ச் 18 – இயற்கையாக கிடைத்த அழகை விட்டு விட்டு, மேலும் அழகு படுத்துகிறேன் என்று கூறிக் கொண்டு பெண்கள் போட்டுக் கொள்ளும் அழகு சாதனப் பொருட்கள் உடல் நலத்திற்கே ஆபத்தாக விளைக்கின்றன என மலாயாப் பல்கலைக்கழக மருத்துவமனையின் சரும ஆலோசனை மருத்துவரும் மற்றும் விரிவுரையாளரான துணைப் பேராசிரியர் டாக்டர். குவான் ஜென்லி எச்சரித்துள்ளார்.

சருமத்தின் நிறத்தை மாற்றக்கூடிய ஓவர்-தி-கவுண்டன்ர் (over the counter) தயாரிப்புகளில் வெளிவரும் பாதரசம், ஹைட்ரோகுவினொன் (hydroquinone) ஆகியவை முகத்திலுள்ள கரும்புள்ளிகள், பருக்களால் ஏற்படும் வடுக்கள் ஆகியவற்றைக் குறைக்கவும் சீராக்கவும் ஒளிரச் செய்யவும் பயன்படுத்தப்படுகின்றன.

இதன் தயாரிப்புகள் தொடர்பாக சுகாதார ஆணையம் பல எச்சரிக்கைகள் விடுத்தும், மலேசியாவில் இதன் பொருட்கள் பல்வேறு தளங்கள் வழியாக வேகமாகச் சந்தையில் ஊடுருவி வருகின்றன.

எந்த தடையுமின்றி இந்தத் தயாரிப்புகளைப் பயன்படுத்தி வரும் பலர் ஏற்கனவே கடுமையான பக்க விளைவுகளைச் சந்தித்து வருகின்ற நிலையில், இன்னமும் இதுகுறித்த ஆபத்துகளை பயனர்கள் உணரவில்லை என்று டாக்டர். குவான் சுட்டிகாட்டினார்.

இதனிடையே, அழகுசாதனப் பொருட்களின் பாதுகாப்பு குறித்து சமீபத்தில் மலேசியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அனுமதிக்கப்படும் பாதரத்தின் அளவை விட பரிசோதிக்கப்பட்ட தயாரிப்புகளில் 838,123 ppm என்ற அளவில் அதிகமாக உள்ள திடுக்கிடும் தகவல் கண்டறியப்பட்டுள்ளது.

தடை செய்ய கூடிய இந்த பொருட்களை அதிகப்படியாகப் பயன்படுத்துகின்ற நிலையில், இதன் விளைவுகள் மிகவும் ஆபத்தாக அமைகின்றது.

எடையிழப்பு, நடுக்கம், நீர்க்கோவை, சோர்வு, தூக்கமின்மை, மன அழுத்தம், பதட்டம் என ஆரம்பக்கட்ட பக்க விளைவுகளாக ஆரம்பித்து, பின்பு சருமம் செரிமான மண்டலம், நரம்பு வரை பாதிப்புகளை ஏற்படுத்தி விடுகிறது.

இந்த எதிர்பாராத விளைவுகளை எதிர்கொள்கின்ற வேலையில், சுயமாகச் செய்துகொள்ளும் வைத்தியங்கள் சில நேரங்களில் ஓரளவு உதவும் என்றாலும், பெரும்பாலும் நிபுணத்துவ உதவி பரிந்துரைக்கப்படுகிறது.

இதுவே தற்போது தீவிர தடுப்பு கட்டுப்பாட்டிற்கான தேவைக்கு வழிவகுத்துள்ளது.

இந்நிலையில், உடலின் பெரும் பகுதியாக சருமம் உள்ளது என்பதால், அதைக் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டியது நமது கடமையாகும்.

சருமப் பிரச்சனைகள் ஏற்பட்டால், அவை எதனால் ஏற்பட்டன என்பதைக் கண்டறிந்து பொருத்தமான சிகிச்சை பெற மருத்துவரைச் சந்திக்க வேண்டியது அவசியம்.
‘அப்போதுதான் பிரச்சனைகளைச் சரியாக கண்டறிந்து, அதற்கான தீர்வை கவனித்து சரிசெய்ய இயலும்’ என துணைப் பேராசிரியர் டாக்டர் குவான் அறிவுறுத்தியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!