
பாலிங், மே 7- தனது தாய் ஓட்டிச் சென்ற காரின் இருக்கையில் இருந்த இரும்புக்
கம்பி குத்தியதில் ஆறு வயது சிறுவனின் வலது கண்ணில் காயம் ஏற்பட்டது.
கோலாக் கெட்டில் ,Sungai Kembalலில் உள்ள தனது வீட்டிலிருந்து, பெக்கான் பாலிங்கில் நடைபெறும் ஒரு சமய வகுப்புக்கு, பாதிக்கப்பட்ட சிறுவன் தனது தாய் ஓட்டிச் சென்ற காரில் பயணம் செய்துகொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
மற்ற காயங்களையும் வலது கண்ணில் இரத்தக் கசிவையும் தவிர்க்கும் பொருட்டு, தீயணைப்பு படை உறுப்பினர்கள் ‘மினி கட்டர்’ ( ‘mini cutter’) ஒன்றைப் பயன்படுத்தி உலோகத்தை வெட்ட உதவினர்.
உலோகத்தை எளிதாக வெட்டுவதற்காக, தீயணைப்பு வீரர் பஞ்சை அகற்ற மெத்தையைக் குத்தினார்.
பிற்பகல் 3 மணிக்குத் தங்களது துறைக்கு அவசர அழைப்பு வந்ததாகவும், அதைத் தொடர்ந்து Parit Panjangகிலுள்ள சுகாதார கிளினிக்கிற்கு தீயணைப்பு வீரர்கள் விரைவாக அனுப்பிவைக்கப்பட்டனர் என பாலிங் தீயணைப்பு மற்றும் மீட்பு நியையத்தின் அதிகாரி சுல்கைரி மாட் தன்ஜில் ( Zulkhairi Mat Tanjil ) தெரிவித்தார்.
இறுதியாக அந்த கம்பி 15 நிமிடங்களில் வெற்றிகரமாக வெட்டி எடுக்கப்பட்டதுடன், பாதிக்கப்பட்ட சிறுவன் மேல் நடவடிக்கைக்காக பின்னர் பாலிங் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டான்.



