
கெடா, ஆகஸ்ட் 28 – கெடா, பாலிங் கம்போங் தெலுக் சுங்கை டுரியான் பகுதியிலுள்ள ஒரு கோழிக் கூண்டில் சுமார் 6 மீட்டர் நீளமும் 70 கிலோ எடையும் கொண்ட மலைப்பாம்பு கண்டுபிடிக்கப்பட்டது.
நேற்று இரவு கோழிக் கூண்டில் இருந்து அதிக சத்தம் கேட்டதைத் தொடர்ந்து பொதுமக்கள் அவசர உதவியை அழைத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மலேசிய சிவில் பாதுகாப்புப் படையின் (APM) நான்கு உறுப்பினர்கள், பாம்பை பாதுகாப்பாகப் பிடித்தனர்.
இரவு 10 மணியளவில் நடவடிக்கை முடிவடைந்ததைத் தொடர்ந்து, அந்த மலைப்பாம்பு பாலிங் மாவட்ட வனவிலங்கு மற்றும் தேசியப் பூங்கா துறையான PERHILITAN-இடம் ஒப்படைக்கப்பட்டது.
பெரிய அளவிலான பாம்புகள் உள்ளிட்ட வனவிலங்குகள் தென்பட்டால், பொதுமக்கள் அவற்றை நெருங்கவோ தாங்களாகவே பிடிக்க முயற்சிக்கவோ வேண்டாமென APM அறிவுறுத்தியுள்ளது.



