Latestவிளையாட்டு

பிஃபாவின் தர வரிசைப் பட்டியலில் ஹரிமாவ் மலாயா காற்பந்து குழுவுக்கு 132 ஆவது இடம்

கோலாலம்பூர் , பிப் 16 – பிஃபா (Fifa) எனப்படும் அனைத்துலக காற்பந்து சம்மேளனத்தின் தர வரிசைப் பட்டியலில்ஹரிமாவ் மலாயா காற்பந்துக் குழு 130 ஆவது இடத்திலிருந்து 132 ஆவது இடத்திற்கு சரிவு கண்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு டோஹாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஜோர்டான், பஹ்ரைன் அணிகளிடம் தோல்வி கண்டு தென் கொரியாவிடம் 3 -3 என்ற கோல் கணக்கில் சமநிலைக் கண்டதால் ஒரு புள்ளியை மட்டுமே மலேசிய காற்பந்து குழு பெற்று முதல் சுற்றிலேயே வெளியேறியது. தேசிய காற்பந்து குழுவின் அடைவு நிலையை மேம்படுத்துவதற்கு அந்த ஒரு புள்ளி போதுமானதாக இல்லை. இதனால் ஆசிய நாடுகளின் தர வரிசை பட்டியலில் மலேசிய காற்பந்து அணி 23 ஆவது இடத்திலும் அனைத்துலக தர வரிசையில் 132 இடத்திலும் உள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!