ஜோர்ஜ் டவுன், பிப் 28 – எது சரி தவறு என மாணவர்களுக்கு வழிகாட்டக் கூடியவர் ஆசிரியர். ஆனால் ஆசியர் ஒருவரே, ஆபத்தான முறையில் , உயர் ஆற்றல் கொண்ட மோட்டார் சைக்கிளில் சாகசம் புரிந்தது தொடர்பில் போலீஸ் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக நேற்று முதல் சமூக வலைத்தளங்களில், பினாங்கு பாலத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவாறு சிலர் சாகசம் புரிந்த காணொளி அதிகம் பகிரப்படிருந்தது.
அவர்களது செயல் இதர வாகனமோட்டிகளுக்கு ஆபத்தாக அமைந்ததோடு, அதன் தொடர்பில், Barat Daya மாவட்ட போலீஸ் தலைமையகம் போலீஸ் புகார் ஒன்றையும் பெற்றது.
அந்த காணொளியில் இருந்த நபர் ஒருவர் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும், அவர் கோலாலம்பூரில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் போதிக்கும் ஆசிரியர் எனவும் தெரிய வந்துள்ளது.