
பிரான்ஸ், ஜூன்-29 – பிரான்ஸ் நாட்டின் டோம்ப்லைன் (Tomblaine) பகுதியில் ஸ்கைடைவிங் (skydiving) பயிற்சிக்காக பயன்படுத்தப்பட்ட சிறிய விமானம் நேற்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 11 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அவர்களில் 5 பயிற்றுநர்கள், 5 பயிற்சி மாணவர்கள் மற்றும் விமானி ஒருவர் உள்ளடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜெர்மனி நாட்டில் பதிவு செய்யப்பட்ட அந்த விமானம், விமானத் தளத்தின் ஓடுபாதை அருகே கீழே விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்திற்கான காரணம் இன்னும் தெரியாத நிலையில், அதிகாரிகள் தொழில்நுட்ப விசாரணையை தொடங்கியுள்ளனர்.



