
ஷா ஆலாம், அக்டோபர்-2,சிலாங்கூர் மாநில அரசு வழங்கி வரும் மாதாந்திர 30 ரிங்கிட் பொதுப் போக்குவரத்து மானியத் திட்டம், இனி KTM Komuter இரயில் சேவைக்கும் விரிவுபடுத்தப்படுகிறது.
கிள்ளான் பள்ளத்தாக்கு, வட பகுதி மற்றும் தெற்கு பகுதி Komuter வழித்தடங்களில் பயணிப்பவர்கள் இந்தச் சலுகையைப் பெறலாம் என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் Ng Sze Han தெரிவித்துள்ளார்.
வரும் டிசம்பர் மாதம் வரை அமுலில் இருக்கும் இத்திட்டம் மூலம் சுமார் 50 ஆயிரம் பயணிகள் பயனடைய இலக்கு வைக்கப்பட்டுள்ளது.
சிலாங்கூர் மாநிலத்தில் பதிவுச் செய்த வாக்காளர்கள் மட்டுமே இந்த மானியத்தைப் பெறத் தகுதியுடையவர்கள்; எனினும் அவர்களது தற்போதைய வசிப்பிடம் அல்லது பணிப் புரியும் இடம் இதில் கருத்தில் கொள்ளப்படாது என்றார் அவர்.
தகுதியுள்ள பயணிகள் NINE செயலி வாயிலாக இதற்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டவுடன், பயனர்களின் NINE e-wallet-ட்டில் 30 ரிங்கிட் வைக்கப்படும்.
அதனைக் கொண்டு KTMB Mobile அல்லது KITS Style செயலிகள் வழியாக Komuter இரயில் பயண டிக்கெட்டுகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.



