Latestமலேசியா

பிளாஸ்டிக் பைகளை கடலில் வீசும் நாடுகளின் பட்டியலில் மலேசியாவுக்கு 5ஆவது இடம்

கோலாலம்பூர், ஏப் 22 – பிளாஸ்டிக் பைகளை கடலில் எறிந்து சுற்றுப்புற தூய்மையை ஏற்படுத்தும் உலக நாடுகளின் பட்டியலில் மலேசியா 5ஆவது இடத்தை பெற்றுள்ளதாக பிரிட்டனின் எரிபொருள் சேவை நிறுவனமான
Utility Bider தெரிவித்துள்ளது. ஒவ்வொருவரும் ஒரு ஆண்டுக்கு தலா 2.30 கிலோகிரேம் பிளாஸ்டிக்கை கடலில் வீசுவதாக அந்த நிறுவனம் வெளியிட்ட ஆய்வில் கூறப்பட்டது. பிளாஸ்டிக் கழிவுகளை அதிகமாக ஏற்றுமதி செய்யும் நாடு, பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் குப்பைகளை அதிகமாக கொண்ட நாடு மற்றும் குப்பை கழிவுகளை அதிக அளவு தவறாக கையாளும் நாடு என்பதன் மூலம் பிளாஸ்டிக் மூலம் ஏற்படுத்தும் சுற்றுப்புற தூய்மைக் கேடு ஆய்வை Utility Bider மேற்கொண்டது.

பிளாஸ்டிக் பைகளை கடலில் வீசி சுற்றுப்புற தூய்மைக் கேட்டை ஏற்படுத்தும் நாடுகளின் பட்டியலில் Philippines முதல் இடத்தை பெற்றது . அந்நாட்டு மக்களில் ஒவ்வொருவரும் ஒரு ஆண்டிற்கு 3.3 கிலோகிரேம் பிளாஸ்டிக் கழிவுகளை கடலில் எறிவதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டது. இந்த ஆய்வில் Surinam இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!