
கோலாலம்பூர், செப்-29-இன்று காலை 9 மணி நிலவரப்படி, நாட்டின் 31 பகுதிகளில் காற்றத் தூய்மைக்கேட்டுக் குறியீடு (API) ஆரோக்கியமற்ற நிலையில் பதிவாகியுள்ளன. APIMS இணையதளத் தகவலின்படி, சில பகுதிகளில் API அளவு 160-க்கும் அதிகமாகப் பதிவாகியுள்ளது.
சரவாக்கின் Serian மாவட்டக் காவல் தலைமையகப் பகுதியில் API 175 ஆக உள்ளது. ஜோகூர் பாசிர் கூடாங்கில் 170 ஆகவும் Larkinனில் 169 ஆகவும் இருக்கிறது. மலாக்கா மாநகரில் அக்குறியீடு 166 ஆக உள்ளது. நெகிரி செம்பிலானின் நீலாய் (165), சிலாங்கூரின் Johan Setia (163), கோலாலம்பூரில் Batu Muda (114) எனப் பதிவாகியுள்ளது. இதனிடையே, 30 பகுதிகளில் API மிதமான நிலையிலும், ஏழு பகுதிகளில் நல்ல நிலையிலும் இருக்கின்றன.
API அளவு 0 முதல் 50 வரை இருந்தால் நல்ல காற்றுத் தரமாகவும், 51 முதல் 100 வரை மிதமான நிலையிலும், 101 முதல் 200 வரை ஆரோக்கியமற்ற நிலையிலும் கருதப்படுகிறது. 201 முதல் 300 வரை மிகவும் ஆரோக்கியமற்ற நிலையையும், 300-க்கு மேல் அபாயகரமான நிலையையும் குறிக்கிறது.



