Latestமலேசியா

புகைமூட்டம்: 20 பகுதிகளில் ஆரோக்கியமற்ற நிலை, Batu Pahatடில் API குறியீடு 186 ஆக உயர்வு

கோலாலம்பூர், அக்.06–இன்று காலை 7 மணி நிலவரப்படி நாட்டின் 20 பகுதிகளில் காற்றும் தூய்மைக்கேட்டுக் குறியீடு (API) ஆரோக்கியமற்ற நிலையில் பதிவாகியுள்ளது. ஜோகூர், Batu Pahatட்டில் API குறியீடு மிக அதிகமாக 186 ஆக இருக்கிறது.

அடுத்து Kluang (169), Larkin (166), Segamat (165), Pasir Gudang (164), Tangkak (163), Nilai (160) என்ற குறியீடுகள் பதிவாகின. சிரம்பான் (156), Kota Tinggi (155), Pengerang (154), Bandaraya Melaka (153) என காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் உள்ளது.

புத்ராஜெயா, Rompin, Balok Baru Kuantan ஆகிய பகுதிகளில் API குறியீடு 152 ஆக இருக்கிறது. Cheras (137), Indera Mahkota Kuantan (124), Kemaman (121) என API குறியீடு பதிவாகியுள்ளது. Batu Muda, Bukit Rambai, Pakaவில் 103 ஆக உள்ளது.

இதனிடையே 43 பகுதிகளில் காற்றின் தரம் மிதமான நிலையில் இருக்கிறது. ஐந்து பகுதிகளில் நல்ல நிலை காணப்படுகிறது. API அளவு 0 முதல் 50 வரை நல்ல நிலை, 51 முதல் 100 வரை மிதமானது, 101 முதல் 200 வரை ஆரோக்கியமற்றது, 201 முதல் 300 வரை மிகவும் ஆரோக்கியமற்றது, 301 மற்றும் அதற்கு மேல் அபாயகரமானது என வகைப்படுத்தப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!