Latestமலேசியா

புத்தகப் பற்றுச் சீட்டு; 3 நாட்களில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பலன்

கோலாலம்பூர், ஜூன்-3 – கடந்த 3 நாட்களில் இதுவரை 1 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகப் பற்றுச் சீட்டுகளை மாணவர்கள் பெற்றிருக்கின்றனர்.

அவற்றில் 56,466 புத்தகப் பற்றுச் சீற்றுகள் கல்வி அமைச்சின் கீழ் நான்காம் வகுப்புக்கு மேல் தொடங்கி இடைநிலைப் பள்ளி வரையிலான மாணவர்களை உட்படுத்தியவை; ஏனைய 50,000 பற்றுச் சீட்டுகள் உயர் கல்வி அமைச்சு அளவிலானவை என கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சிடேக் கூறினார்.

அப்பற்றுச் சீட்டுகள் வாயிலாக இதுவரை 1 லட்சத்து 22 ஆயிரம் புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளன; அவற்றின் மொத்த மதிப்பு 6 லட்சம் ரிங்கிட்டைத் தாண்டும் என அமைச்சர் சொன்னார்.

மாணவர்கள் மத்தியில் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க, அப்புத்தகப் பற்றுச் சீட்டு திட்டம் தூண்டுகோலாக இருப்பதை இது காட்டுகிறது.

பெற்றோர்களும் அவ்வாய்ப்பை நன்குப் பயன்படுத்திக் கொண்டு, அத்திட்டத்தில் பிள்ளைகள் பலன் பெறுவதை உறுதிச் செய்வதாக ஃபாட்லீனா மகிழ்ச்சியுடன் கூறினார்.

ஆரம்பப் பள்ளியில் நான்காம் வகுப்புக்கு மேல், இடைநிலைப் பள்ளி மாணவர்கள், உயர் கல்விக் கூட மாணவர்கள், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி மாணவர்கள் வரை பயனடையும் வகையில் இந்த பற்றுச் சீட்டுத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த 100 ரிங்கிட் புத்தகப் பற்றுச் சீட்டுகளை மே 31-ஆம் தேதி முதல் வரும் டிசம்பர் 31-ஆம் தேதி ரிடீம் செய்ய முடியும்.

இத்திட்டம் அடுத்தாண்டும் தொடரப்படுமா என்ற கேள்விக்கு, இவ்வாண்டு கிடைக்கப் பெறும் வரவேற்பைப் பொருத்தும், மொத்த செலவினத்தைக் கணக்கில் கொண்டும் அது முடிவு செய்யப்படும் என ஃபாட்லீனா கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!