Latestமலேசியா

புத்தாக்கம் & நம்பகத்தன்மையின் வடிவமாக புதிய வகை குளிர்சாதனப்பெட்டிகளை அறிமுகம் செய்த Panasonic

அம்பாங் ஜெயா, மே-16 – Panasonic நிறுவனம் தனது புதிய 4 வகை குளிர்சாதனப்பெட்டிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

X-Deluxe Inverter Series, Smart Inverter Series, Standard Inverter Series, Eco Inverter Series ஆகியவையே அப்புதிய வகை AC-களாகும்.

அதிகரித்து வரும் ஆற்றல் செலவுகள் மற்றும் வசதியான அதே சமயம் ஆரோக்கியமான வாழ்க்கைச் சூழலை உருவாக்க வேண்டியத் தேவைக்கு மத்தியில், Panasonic-யின் இப்புதியக் குளிர்சாதனப்பெட்டிகள் புத்தாக்க மற்றும் நம்பகத்தன்மையின் சின்னங்களாக திகழ்கின்றன.

Panasonic Malaysia Air Conditioning நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி Dai Nishi அவ்வாறு பெருமிதம் தெரிவித்தார்.

குளிர்சாதனப்பெட்டிகள் மலேசியர்களுக்கு ஆடம்பரம் அல்ல; மாறாக அவசியமானவை.

வெப்பத்திலிருந்து நிவாரணம் அளிக்கும் அதே சமயம், அதிகப்படியான AC பயன்பாட்டினால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வருவதையும் நாங்கள் அறிவோம்.

அதனையும் கருத்தில் கொண்டு தான் இப்புதிய வெளியீடுகள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

நானோ தொழில்நுட்பம், இன்வெர்ட்டர் தொழில்நுட்பம் மற்றும் உள்ளுணர்வு AI ECO பயன்முறை போன்ற அம்சங்களுடன், Panasonic நிறுவனத்தின் புதிய AC-கள் குளிரூட்டும் தீர்வுகளில் சிறந்த செயல்திறன் மற்றும் வசதியை மதிக்கும் எவரையும் ஈர்க்கும் என Dai Nishi கூறினார்.

இப்புதிய வகை AC-களை “On Lah Jimat & Selamat, Bila-Bila Masa” இயக்கத்தின் வாயிலாக Panasonic அறிமுகம் செய்கிறது.

ஆற்றல் திறன் மற்றும் சேமிப்பை ஊக்குவிக்கும் அதே வேளையில், இன்வெர்ட்டர் தொழில்நுட்பத்தின் நன்மைகள் பற்றி வாடிக்கையாளர்களுக்குக் கற்பிப்பதை அவ்வியக்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

அக்குளிர்சாதனப்பெட்டிகளின் தொடக்க விலை 1,684 ரிங்கிட்டாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Panasonic AC-கள் குறித்த மேல் தகவல்களுக்கு அந்நிறுவனத்தின் சமூக ஊடகப் பக்கங்களையோ அல்லது அருகில் உள்ள Panasonic கடைகளையோ நாடலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!