Latestமலேசியா

புத்ராஜெயாவில் கார் மோதியதில் இரு மிதிவண்டி ஓட்டுநர்கள் மரணம்

புத்ராஜெயா, ஆகஸ்ட்-21- புத்ராஜெயா, Jalan Persiaran Selatan சாலையின் 9.0 ஆவது கிலோமீட்டர் பகுதியில் காரொன்று மோதியதில் மிதிவண்டியில் சென்று கொண்டிருந்த இருவர் உயிரிழந்தனர்.
அவ்விபத்து நேற்றிரவு இரவு சுமார் 10.15 மணியளவில் நிகழ்ந்தது. விபத்தில் பலியானவர்கள் 48 வயது Mohd Hilmi Tahar, 30 வயது Syazwan Zharif Abdul Karim என அடையாளம் காணப்பட்டுள்ளது.

40 வயது மதிக்கத்தக்க நபர் ஓட்டிச் சென்ற கார், நடுபாதையிலிருந்து இடதுபுறப் பாதைக்கு மாறிய போது அவ்விருவர் மீதும் மோதியது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவ்விரு மிதிவண்டி ஓட்டுநர்களும் முகம் மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக புத்ராஜெயா மாவட்டக் காவல் துறைத் தலைவர் உதவி ஆணையர் Aidi Sham Mohamed தெரிவித்தார்.

1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 41(1)-இன் கீழ் அச்சம்பவம் விசாரிக்கப்பட்டு வருகிறது. அவ்விபத்து தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் புத்ராஜெயா போக்குவரத்து காவல் நிலையத்தை 03-8886 2138 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது அருகிலுள்ள காவல் நிலையம் சென்று விசாரணைக்கு உதவ முன் வருமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!