Latestமலேசியா

14 வயது கேஷாவின் மரணம்: “உண்மை வெளிவர வேண்டும்; இன்னொரு குழந்தைக்கும் இது நடக்கக் கூடாது” – குடும்பம்

செத்தாபாக், ஆகஸ்ட் 20 – கடந்த ஆகஸ்ட் 18-ஆம் தேதி உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட 14 வயது மாணவி Keziah-வின் குடும்பத்தினரை இன்று நேரில் சந்தித்த வங்சா மாஜு நாடாளுமன்ற உறுப்பினர் (PUT HIS NAME) தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.

மாணவியின் மரணத்திற்கான உண்மையான காரணம் கண்டறியப்பட வேண்டியது மிகவும் அவசியம் எனக் கூறிய அவர், மாவட்டக் கல்வி அலுவலகம் (PPD), சம்பந்தப்பட்ட பள்ளி மற்றும் போலீசார் இந்த விவகாரத்தை தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க, என்ன நடந்தது, அதற்கான காரணம் என்ன என்பதை முழுமையாகக் கண்டறிவது அவசியம் என்றும், ஒரு சிறுமியின் உயிரிழப்பு மிகுந்த கவலைக்குரிய ஒன்று என்றும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே, மகளை இழந்த தாய் தனது வேதனையை வணக்கம் மலேசியாவிடம் பகிர்ந்துகொண்டார்.

“என் பிறந்தநாளுக்கு பெரிய surprise கொடுக்கப் போகிறேன் என்று என் மகள் சொல்லியிருந்தாள். ஆனால் அவளின் மரணமே எனக்குக் கிடைத்த அந்த ‘surprise’ ஆகிவிடும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை,” என அவர் கண்ணீருடன் கூறினார்.

பள்ளியில் தனது மகள் துன்புறுத்தலுக்கு உள்ளாகியதாக பலமுறை புகார் அளித்ததாகவும், சில சந்தர்ப்பங்களில் புகாருக்கு உரிய கவனம் கிடைக்காமல், மாறாக தனது மகளே கண்டிக்கப்பட்டதாகவும், அதனால் மனமுடைந்து வீட்டில் அழுததாகவும் தாயார் தெரிவித்தார்.

இதனிடையே, Keziahவின் பாட்டியும், பள்ளிகளில் மாணவர்கள் தெரிவிக்கும் புகார்கள் மற்றும் மனக்குறைகளை அலட்சியப்படுத்தாமல் காது கொடுத்து கேட்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

அதேவேளை, Keziah-வின் மாமா மணி, விசாரணை இன்னும் நடைபெற்று வரும் நிலையில் சமூக ஊடகங்களில் உறுதிப்படுத்தப்படாத தகவல்களையும் வதந்திகளையும் பரப்ப வேண்டாம் என்று பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

14 வயது கேஷாவின் மரணம் தொடர்பான விசாரணை தொடரும் நிலையில், “என்ன நடந்தது என்ற உண்மை வெளிவர வேண்டும்; அதே வேதனையை இன்னொரு குடும்பம் சந்திக்கக் கூடாது” என்பதே குடும்பத்தினரின் ஒருமித்த வேண்டுகோளாக உள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!