Latestமலேசியா

பூமிபுத்ரா அல்லாத மாணவர்களுக்கு UiTM பல்கலைக்கழகத்தைத் திறந்து விட தெங்கு ரசாலி எதிர்ப்பு

கோலாலம்பூர், மே-21 இருதய அறுவை சிகிச்சையில் முதுகலைப் பயிற்சிப் பெற ஏதுவாக பூமிபுத்ரா அல்லாத மாணவர்களுக்கு UiTM-மைத் திறந்து விடுவதில் தமக்கு உடன்பாடு இல்லை என்கிறார், பழம்பெரும் அரசியல்வாதியும் அம்னோ மூத்தத் தலைவருமான Tengku Razaleigh Hamzah.

தம்மைக் கேட்டால், பூமிபுத்ரா மாணவர்களின் சிறப்புரிமையாக UiTM கட்டிக் காக்கப்பட வேண்டும் என்றார் அவர்.

ஒரு தனிப்பட்ட குறிக்கோளுக்காக ஒன்றை முடிவுச் செய்தால், அதை அப்படியே அதன் போக்கிலேயே விட்டு விட வேண்டும்.

மாற்றத்திற்கான தேவை நிச்சயம் வரும்; ஆனால் இப்போதைக்கு அப்படியொரு தேவை இருப்பதாக தாம் கருதவில்லை என, நாட்டின் முன்னாள் நிதியமைச்சருமான Tengku Razaleigh கூறினார்.

கூலி: 205 நினைவுக் குறிப்பு என்ற தனது சுயசரிதை நூல் வெளியீட்டு விழாவில் பேசிய போது அப்பெரும் தலைவர் அவ்வாறு சொன்னார்.

UiTM – IJN ஒத்துழைப்பிலான இருதய அறுவை சிகிச்சை முதுகலைப் பயிற்சியை பூமிபுத்ரா அல்லாத மாணவர்களுக்குத் திறந்து விட அப்பல்கலைக்கழகம் இணங்குவதாக அதன் வாரிய உறுப்பினர் ஒருவரை மேற்கோள்காட்டி ஏப்ரல் 25-ஆம் தேதி தகவல் வெளியானது.

IJN-னின் ஒத்துழைப்பில், இருதய மற்றும் நுரையீரல் கோளாறுகளுக்கான அறுவை சிகிச்சைகள் மற்றும் பராமரிப்புகளை உட்படுத்திய அந்த parallel pathway பயிற்சித் திட்டத்தை நாட்டில் வழங்கும் ஒரே பல்கலைக் கழகம் UiTM ஆகும்.

நிலைமை இப்படியிருக்க, UiTM பல்கலைக்கழகத்தை பூமி புத்ரா அல்லாத மாணவர்களுக்குத் திறந்து விட பேச்சுவார்த்தைகள் எதுவும் நடைபெறவில்லை என உயர் கல்வி அமைச்சர் Datuk Seri Dr Zambry Abdul Kadir கூறியிருந்தார்.

அன்றில் இருந்து, அவ்விவகாரம் தொட்டு மாறி மாறி கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!